பாதுகாப்பு படைகளின் பிரதானி ஓய்வு பெறுகிறார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருட கால சேவையினை நிறைவு செய்து இன்று(31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படைகளில் நீண்ட கால சேவை மற்றும் சிரேஷ்ட அதிகாரியாக உள்ள அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன, 1980 ஆம் நவம்பர் 01 ஆம் திகதி கடற்படையில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.