(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 இந்திய சுற்றுப் பயணத்திற்கான 16 பேர் அடங்கிய இலங்கை இருபதுக்கு -20 அணி வீரர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் இருபதுக்கு-20 போட்டி 2020 ஜனவரி 5ம் திகதி கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 மாதங்களுக்கு பின்னர் முன்னாள் அணித்தலைவர் மேத்யூஸ் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அணி வீரர்கள் விபரம்:
லசித் மலிங்கா (அணித்தலைவர்) (Lasith Malinga)
குசால் பெரேரா (Kusal Perera)
தனுஷ்க குணதிலக்க (Danushka Gunathilaka)
அவிஷ்க பெர்னாண்டோ (Avishka Fernando)
பானுக்க ராஜபக்ஷ (Banuka Rajapaksha)
ஒசாடா பெர்னாண்டோ (Oshada Fernando)
தசுன் சானக்க (Dasun Shanaka)
ஏஞ்சலோ மேத்யூஸ் (Anjalo Methews)
நிரோஷன் டிக்வெல்ல (Niroshan Dickwella)
குசல் மெண்டிஸ் (Kusal Mendis)
வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga)
லக்ஷன் சண்டகன் (Lakshan Sandakan)
தனஞ்ஜெய டி சில்வா (Dananjaya De Silva)
லஹிரு குமாரா (Lahiru Kumara)
இசுரு உதான (Isuru Udhana)
கசுன் ராஜித (Kasun Rajitha)