(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – இந்திய சீரியலை பார்த்து மகள் செய்த செய்கையால், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃப்ரிடி தொலைக்காட்சி பெட்டியை அடித்து நொறுக்கியதை ஒப்பு கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ஒப்புக்கொண்ட வீடியோ ஒன்று சில நாட்களாக வைரலாகி வருகின்றது. அதில் தொகுப்பாளினி “நீங்கள் எப்பொழுதாவது தொலைக்காட்சியை உடைத்தது உண்டா” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அஃப்ரிடி “என் மனைவியால் ஒருமுறை அவ்வாறு நடந்தது. ஸ்டார் பிளஸ் சேனலில் வெளியாகும் சீரியல்களை இங்கு பலரும் பார்ப்பதுண்டு. அதை என் மனைவியிடம் தனியாக பார்க்குமாறு கூறினேன்.
மேலும், குழந்தைகளை இதில் ஈடுபடுத்த கூடாதென்று அறிவுறுத்தினேன். ஆனால், அதை அவர் மீறினார். அப்போது என் மகள் ஒரு தொடரில் காட்டப்படுவது போல ஆரத்தி செய்வது போல் பாவனை செய்தாள். இதனால் கோபமடைந்த நான் தொலைக்காட்சியை உடைத்துவிட்டேன்” என்று கூறினார்.