ஐ.தே.க – பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமொன்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(02) மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இதற்காக கட்சியினை பிரதிபடுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது நாளை(02) கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.