றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த சந்தேகநபர்கள் தாஜூடீன் கொலை தொடர்பில் சர்ச்சைகள் எழத் தொடங்கியவுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தகவல்களை அறிந்து கொண்ட தாஜூடீன் குடும்பத்தினர், சட்டத்தரணிகளை இத்தாலிக்கு அனுப்பி அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டியுள்ளனர்.

எங்கு தங்கியிருக்கின்றார்கள் எங்கு பணியாற்றுகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் திரட்டி அவற்றை சட்டத்தரணிகள், பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இத்தாலி செல்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதியொருவரது நண்பர் உதவிகளை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)