கல்வித்துறையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி

கல்வித்துறையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

இது ஐந்து வருட திட்டமாகும். இத்திட்டத்தினூடாக கடந்த மூன்று வருடங்களையும் விட அதிக தொகையை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

புதிய அரசினூடாக இலங்கையில் கல்வி மற்றும் அது தொடர்புபட்ட விடயங்களை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கமைய திறன் அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாவும் உயர் கல்வி அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாவும் இரண்டாம் நிலை கல்வி மேம்பாட்டுக்காக 400 மில்லியன் ரூபாவும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

(riz)