பாரிய அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்த தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை அனைத்து பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது,

பாரிய அரச மற்றும் பொதுக்கட்டடங்கள்,வீதிகளுக்கான இதன் மூலம் இடைநிறுத்தப்படவுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.

இந்த தீர்மானம் குறித்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நிர்மாணப் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ள அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.