(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான் ) – 2015ஆம் ஆண்டு பரிஸ் அணுசக்தி உடன்படிக்கையின் அனைத்து வாக்குறுதிகளையும் முறித்துக்கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எரிபொருள் செறிவூட்டல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சேர்த்து வைப்பது, அணுசக்தி ஆய்வு, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் தொடர்பில் எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பாளர்களுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.