பிரதமரின் புதிய கோரிக்கை உங்களுக்கு தெரியுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய சுதந்திர தினத்தன்று இலங்கையர்கள் அனைவரதும் வீடுகளில் மரக்கன்று ஒன்றை நடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினம் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பிரயோசனமான மரக்கன்று ஒன்றை நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

சுதந்திர தின பேரணியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 30 வீதத்தினால் குறைத்துக் கொள்வதற்கும், தலைப்பிற்கு பொருத்தமான வகையில் அவசியமானவர்களை மாத்திரம் பங்கு பெற செய்வதற்கும் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.