காஞ்சீபுரம் மாவட்டம் செய்யார் தாலுகா பாளையம் கொக்கரன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லிங்கேஷ்குமார் (வயது 22) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த இவர் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனால் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலறிந்து லிங்கேஷ்குமார் அவருடைய சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கியதாக சிறுமியுடைய பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து லிங்கேஷ்குமார் காஞ்சீபுரத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் படி அவரை கைது செய்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில, லிங்கேஷ்குமார் ஏற்கனவே தமிழேந்தி என்ற பெண்ணை காதலித்து வந்ததுள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுமியை கற்பழித்துவிட்டு தப்பிச்சென்ற இவர் ஒரு வாரத்திற்கு முன்பு தமிழேந்தி என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தநிலையில் லிங்கேஷ்குமாரை நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு பெலிசார் கைது செய்தனர்.
அவர் மீது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிசார் அரசு காப்பகத்தில் தங்கவைத்தனர்.