புகையிரத சேவைகளில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) – கடிகமுவ மற்றும் இஹல கோட்டே புகையிரத நிலையங்களுக்கு இடையில் கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக ரம்புக்கன நோக்கி பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.