தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இம்மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 24 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில் கையொப்பம் இடப்படவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமையவே நடத்தப்படவுள்ளன.