ஷாபிக்கு மீளவும் குருநாகல் வைத்தியசாலையில் வேலை

(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீனுக்கு மீளவும் சேவையில் இணைந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷாபி டாக்டர், இன்று இலங்­கையில் இவரை அறி­யா­த­வர்கள் இருக்க முடி­யாது. கடந்த ஒரு மாத­மாக நாட்டின் பிர­தான பேசு பொருள்­களில் தவிர்க்­க­மு­டி­யாத ஒரு பெய­ராக அது மாறி­யி­ருக்­கின்­றது. காரணம், ஒரு கருத்­தடை நாடகம், வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­த­தாக ஒரு குற்­றச்­சாட்டு. குற்­றச்­சாட்­டை­விட, கருத்­தடை நாட­கத்தின் பெயரால் சாட்­சிகள் இன்­றியே இன்று ஷாபி டாக்டர் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­டு­விட்டார். இது ஒரு பயங்­க­ர­மான நிலைமை.

எப்­போதும் ஒருவர் தொடர்பில் விசா­ர­ணைகள் செய்து நியா­ய­மான சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் அவர் சந்­தேக நப­ராக அறி­விக்­க­ப்ப­டு­வதும், பின்னர் மேல­திக விசா­ர­ணை­களில் அல்­லது வழக்கு விசா­ர­ணை­களில் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் அவர் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­க­ப்படு­வ­துமே நியா­ய­மான அல்­லது சட்­டத்தின் ஆட்சி இடம்­பெறும் ஒரு நாட்டின் வழ­மை­யாக இருக்க முடியும். எனினும், ஷாபி டாக்­டரின் விவ­கா­ரத்தில், அவர் சாட்­சி­க­ளின்றி குற்­ற­வா­ளி­யாக முழுத் தேசத்­துக்கும் அறி­விக்­கப்­பட்ட பின்­ன­ரேயே, அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ராக தற்­போது நியா­ய­மா­கவோ அநி­யா­ய­மா­கவோ இரு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. ஒன்று, வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை. மற்­றை­யது, சிங்­களப் பெண்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை செய்­தமை.

இந்தக் கட்­டுரை எழு­தப்­படும் இறுதி நிமிடம் வரை­யிலும் அந்த இரு விடயங்கள் தொடர்­பிலும் ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ராக எந்­த­வொரு சாட்­சியும், விசா­ர­ணை­யா­ளர்­களால் கண்டு பிடிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­துதான், ஷாபி டாக்­டரை மையப்­ப­டுத்தி இடம்­பெறும் நாட­கத்தின் உண்மை நிலை­மையை பறை­சாற்றும் சாட்சி.