அனுர பத்திரனவுக்கு CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 13 ஆம் திகதியன்று இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், கபடி சம்மேளத்தின் இரண்டு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.