(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு ரூ. 7,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
மேலும், பொதுத் தேர்தலின் பின்னர் மஹாபொல புலமைப்பரிசிலினை ரூபா.10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.