(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு தொடர்பாக பல கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல,ரஞ்சன் ராமநாயக்கவை மனநல மருத்துவரிடம் காண்பிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடுவது சந்தேகத்துக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை முன்னெடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டால் ரஞ்சனின் எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதான அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.