(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச இயந்திரத்தில் காணப்படும் திறன்னின்மை, தாமதம், மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் சகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் செயலாளர்களுடனான சந்திப்பு இன்று (17) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
சேவை பெறுனர் சேவை வழங்குனரிடம் செல்வதற்குப் பதிலாக இணையம் மூலம் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார்.