
சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு
(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை) – திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணிநேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தம்பலகாமம் பகுதியில் உள்ள பிரதான நீர்வெளியேற்று இயந்திரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுத்திகரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி இன்று காலை முதல் 8 முதல் இரவு 8 மணி வரை திருகோணமலை, கிண்ணியா, குச்சவெளி, தம்பலகாமம் பகுதிகளில் மேற்படி நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.