இலங்கை முஸ்லிம்கள் : மஹாதீருக்கு என்ன நடக்கும்? முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயன்றது தவறா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் அரசியல் களத்தில் இந்தளவு பரபரப்பும் திடீர்த் திருப்பங்களும் இருந்ததில்லை.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். அண்மைய சில ஆண்டுகளாக மூன்று தலைவர்களை மையப்படுத்தியே மலேசிய அரசியல் களம் சுழன்று வருகிறது.

நேற்றைய பிரதமர் நஜீப் ரசாக், இன்றைய பிரதமர் மஹாதீர் முஹம்மத், நாளைய பிரதமராகக் கருதப்படும் அன்வார் இப்ராஹிம் ஆகிய மூவரையும் மையப்படுத்தி நடந்தேறும் நிகழ்வுகள், மூவரைப் பற்றி வெளியாகும் கருத்துகள், இம்மூவரும் தெரிவிக்கும் கருத்துகளால் மலேசிய அரசியல் களத்தில் புதுப்புது சலசலப்புகள், விவாதங்கள் முளைத்து வருகின்றன.

1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நன்கு அனுபவம் பெற்றுள்ள மகாதீர் ஏன் பதவி விலக வேண்டும்? மகாதீர் விலக வேண்டும் என்றும், அன்வார் இப்ராஹிமை பிரதமராக்க வேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்கத்
துவங்கியுள்ளன.

இதற்கு பல்வேறுபட்ட கருத்துக்களை சர்வதேச அரசியல் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தசப்த காலமாக உலக அரசியலில் சிறந்த அரசியல் தலைவர் என்ற பெயரை பெற்ற மஹாதீர் முஹம்மத்திற்கு தற்போது உள்ளுர் அரசிலில் பல்வேறு பிரச்சனை ஏற்படுள்ளது.

இதற்கு அன்மையில் சர்வதேச அரசில் அரங்கை அதிரவைக்க கூடிய சில செயற்த்திட்டங்களை இவர் முன்னெடுத்திருந்தார்.

முக்கியமாக இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மலேசிய அரசு ஏற்பாடு செய்த மாநாடு முக்கியமானதாகும்

இம்மாநாட்டில் மலேசியா, இந்தோனிசியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதும், அதன் மூலம் இஸ்லாமியர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள், விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதும் தான் கோலாலம்பூர் உச்சி மாநாட்டின் நோக்கம் இருந்தது.

இந்த மாநாட்டின் பின்னர் உலக தலைவர்களின் கவனம் மஹாதீர் முஹம்மத் பக்க திரும்பியிருந்தது. முக்கியமாக சர்வதேச ரீதியில் பல்வேறு கருத்துக்கள் வெளியான நிலையில் தற்போது மஹாதீர் முஹம்மத் மீது உள்ளுர் அரசியலில் பல்வேறு பிரச்சனைகள் தோற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஐ.நாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.