பிரபல ஹாலிவுட் நடிகை 74 வயது தயாரிப்பாளருடன் 5-வது திருமணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5-வது திருமணம் செய்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார்.

2 நாட்களுக்கு முன்னர் அவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை எளிமையாக நடந்துள்ளது. பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர்.

இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார்.

புதிதாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Image result for Pamela Anderson 5th wedding