செத்த பாம்பினை சாகடித்த கதையாக இலங்கையின் வெற்றி [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | சிம்பாப்வே) – இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று(23) வெற்றியடைந்த நிலையில், அதற்கு ரசிகர்கள் இடையே ஆதரவுடன் கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளதை சமூக வலைதளங்கள் ஊடாக காணக்கூடியதாக இருந்தது எனலாம்.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே அணி 170 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்து வீச்சில் சுரங்க லக்மால் – 4, லஹிரு குமார – 3, லசித் எம்புல்தெனிய – 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 14 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எவ்வித விக்கெட்டுக்களையும் இழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தது.

எனினும், ரசிகர்களின் ஆதரவு கம்மியாக இருக்கக் காரணமாக இருந்தது. சிம்பாப்வே போன்ற அணியுடன் மோதி இமாலய வெற்றி பெறுவது ஒன்றும் சிரமம் இல்லை, இதையே இந்தியா, அவுஸ்திரேலியா பாகிஸ்தான் என விளையாடி இருந்தால், தோல்வியினை தழுவி இருக்கும் என கூறப்படுகின்றது.

எலியினை பூனை கொன்ற கதையாகிவிட்டது போல் எனவும் நெட்டிசன்கள் இலங்கை வீரர்களை வாட்டியெடுக்கின்றனர்.