(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளார் என
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கடந்த வருடம் நவம்பர் 16ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பலவித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கம் இம்முறை ஜெனீவா விவகாரத்தை கையாளப் போகின்ற விடயம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் விடுக்கவில்லை.
இவற்றையெல்லாம் நாம் எதிர்நோக்கியிருந்தோம். ஆனாலும் தற்போது சுதந்திரக் கட்சி எதிர்கொண்டுவரும் பரிசோதனைகளை வெற்றிகொள்ளும். சின்னம் என்று வருகையில் பொதுவான சின்னம் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
கூட்டணியை அமைத்து அதனைப் பாதுகாப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. ஆகவே பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுவான சின்னம் குறித்து பேச்சினை சுதந்திரக் கட்சி நடத்தும். இல்லாவிட்டால் மாற்று வழி குறித்தும் சிந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருத்துக்களை பார்க்கின்ற போது எதிர்வரும் பொது தேர்தலில் எதிர்கட்சி தலைவராக செயற்படும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமை சஜித்திற்கு வழங்காவிடின் மாற்றுவழியை நோக்கிய பயணிக்க வேண்டி வரும் என சஜித் ஆதரவு தரப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.