(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகளுடன் இன்று காலை சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து இன்று காலை மைசூருக்கு ஒரு சிறியரக விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து தரை இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன், பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.