விமல் வீரவங்சவின் மகனுக்கும் ‘கொரொனோ’?

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவின் வுஹானில் இருந்து வெளியேறிய இலங்கை மாணவர்கள் 50 பேருக்கு தண்ணீர் வழங்காது பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அழைத்துச் செல்வோருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறித்த மாணவர்களில் அமைச்சர் விமல் வீரவங்சவின் மகனும் உள்ளடங்குவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறு இருக்க, சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று(28) தெரிவித்துள்ளார்.

குறித்த கொரொனோ வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.