இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது.
111 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 274 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணிக்கு 386 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2–வது இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் கவுசல் சில்வா, 24 ரன்னும், கெப்டன் மேத்யூஸ் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை), 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
தோல்வியை தவிர்க்க மேலும் 318 ரன் தேவை கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உமேஷ்யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். சில்வா 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன் என்ற நிலையில் இருந்தது.
5–வது விக்கெட்டுக்கு மேத்யூசுடன் திரிமானே ஜோடி சேர்ந்தார்.
இந்த டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. இதனால் பரபரப்பான கட்டத்தில் இந்த டெஸ்ட் இருக்கிறது.
முதல் டெஸ்டில் இலங்கையும், 2–வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. இதனால் தொடர் 1–1 என்ற கணக்கில் இருக்கிறது.
(riz)