இங்கிலாந்தின் கார்ன்வெல் கவுண்டியைச் சேர்ந்தவர் லீ. சரியாக 14 வயதில் இருந்தே இதயத்தில் கோளாறு ஏற்படத் தொடங்கியது. இதற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டார். 20 வயதில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதன் பின்னர் எலக்ட்ரிக் இதயம்(Electric Heart) பொருத்தப்பட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார். இதற்கிடையில், மனைவி, மகன் என்று வாழ்க்கை அதன் போக்கில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் அவருக்கு மீண்டும் இதயத்தில் பிரச்சனை உண்டாகத் தொடங்கியது. உடனடியாக அவர் ஹயர்பீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாற்று இதயம் தேவைப்படுவோருக்கான பட்டியலில் அவரது பெயர் உடனடியாக சேர்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு மாற்று இதயம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அப்போது அவருக்கு மறுஜென்மம் கொடுக்கப்போகும் இதயம் ஐஸ் பெட்டியில்வந்தது. ஆனால், அதிலிருந்த இதயத்தில் துடிப்பு இல்லை. இதனால், அவருக்கு நடக்க இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சை கேள்விக்குறியானது.
அப்போது, சமயோசிதமாக சிந்தித்த மருத்துவர்கள் தங்கள் திறமையை உபயோகப்படுத்தி, நின்றுபோன அந்த இதயத்தை செயற்கையாக மீண்டும் துடிக்க வைத்தனர். ஆபரேசனுக்கான நேரம் நெருங்கும் வரை, அதனை உயிர்ப்புடன் வைத்திருந்த மருத்துவர்கள், அதை வெற்றிகரமாக லீக்கு பொருத்தினர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக தேறி உள்ளது.
மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை அதிகபட்சம் 30 நிமிடங்களுக்குள் மற்றொருவருக்கு பொருத்தியாகவேண்டும். தற்போது, ஹயர்பீல்டு மருத்துவர்கள் உருவாக்கிய புரட்சிகரமான ‘பெட்டிக்குள் இதயம்’ என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக அதிகபட்சம் 8 மணி நேரம் வரை இதயத்தை துடிப்புடன் வைத்திருக்க முடியும். இதனால், இனி இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காலக்கெடு ஒரு தடையாக இருக்காது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=CnVWBH9k4PM” width=”560″ height=”315″]
(riz)