வவுனியாவின் முதல் முஸ்லிம் பெண் கவிதாயினி-செல்வி ஜெசீரா

இன்றய மாறி வரும் உலகில் மாற்றங்களோடு  மனிதனும் புதிதாக பயணிக்க விரும்புவதில் தவறிருக்காது என பலரும்  சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் அதனை செயற்படுத்துவதில்  எல்லோருக்கும் சிக்கல் இருக்கிறது ஆனாலும் ஒரு பெண்ணால் முடிகிறது என்றால் பாராட்டுக்களுடன்  அது வரலாறு பேச வேண்டிய விடயம் என்றாலும் பெண்  என்பதால் பேசாமல் விட்டு  விட்டார்கள் போல.
செல்வி ரியால்தீன் ஜெசீரா ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்  இருந்தவள் இன்று வவுனியா மாவட்டத்தின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு  முஸ்லிம் பெண் கவிதாயினியாக “காலச்சுவடு” என்னும் கவிதை தொகுப்பை வெளியீடு செய்ததன்  மூலம்  தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். எழுத்துலகில் பலரும் கால் வைக்கும் காலநிலையில் கால்கலற்றவன் கூட நிமிர்ந்து நிற்கலாம் என முயன்று தோற்றுப் போகும் ஒவ்வொருவருக்கும் இவள் ஒரு நல்ல ஆசானாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
1995ம் ஆண்டு வவுனியா மாவட்டத்தின் செட்டிக்கும் பிரதேசத்தின் வாழவைத்தகுளம் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஜெசீரா சிறு வயதில் சரியான உச்சரிப்புடன் பேச முடியாத ஒரே காரணத்தால்  ஊனமுற்ற  சமூகத்தினுள் அவள் பெயரையும்  உச்சரித்த பலர் இன்று  வியந்து பாராட்டுகிராகள் ,ஒரு நாள் சாதிப்பேன் என்ற மனக்குமுறலுடன் வாழப்பலகிக்கொண்ட ஜெசீரா தனது ஆரம்ப கல்வியை ஆண்டியா  புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலத்தில்  கற்றுக்கொண்டார் பின்னர் இடைக்கல்வியை முதலியார்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் தன்னுடைய கவித்திறமையையும் புலமையையும் மாவட்டம் மாகாணம் என பறை சாற்றி அப்பாடசாலைக்கு  பெருமையை ஈட்டிக்கொடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.
தன்வாழ்வில் அனுபவித்த துன்பங்களையும் ஏக்கங்களையும் அடிக்கடி ஏடாக பதிவு செய்து வைத்துக்கொண்ட
ஜெசீரா மீண்டும் தன்னுடைய  தாய்ப்பாடசாலையான ஆண்டியா புளியங்குளம் மு.வியில் உயர்தர கல்வியை தொடர்ந்தார் குறித்த இக்காலப்பகுதியில் இவரால் புனையப்படும் கவிதைகளை பாடசாலை சமூகமே ரசித்தது.
அமைதிக்கடல்தானே சுனாமியை தந்தது அது  போல் இவள் தந்துள்ள கவிதைகளை  சுனாமியாய் இல்லா விட்டாலும் சிறு சுழல் காற்றாய் உலகுக்கு பறை சாற்ற அப்பாடசாலையின் முதல்வர் மொஹமெட் ஜாபிர்  கருகிய மரத்து  வேரின் அடியில் நீர் விட்டு அது இன்று  கிளை விட்டு பெயர் சொல்லும் அளவிற்கு வளர்வதற்கு  முக்கிய காரணாமாக இருந்தவர். அத்துடன் அவரது பாடசாலை சமூகம்.தந்தை ரியால்டீன், சமூகத்தில் அவளுக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் என்பனவும் காராணமாக அமைந்தது
ஜெசீரா தன்னுடைய 50 பக்கங்கள் கொண்ட 50 கவிதைகளுடனான “காலச்சுவடு” கவிதை நூலில் தன்னுடைய ஏக்கத்தை முதல் கவிதைக்குள் நுழைந்த போது ……….
பாலை வனத்திலே பட்டாம் பூச்சியும்
முட்கள் தீண்டிய பூவின் நடுக்கமும்
உதடுகளின் அரும்பு புன்னகையும்
என் உள்ளத்தின் காலச்சுவடு ……………..என்று   இறுதியில் இவ்வாறு முடித்து  அடுத்த கவிதைக்குள் உள் நுழைகிறார் ‘தன்  சிந்தனைகளை ஏக்கங்களை மௌனிக்கப்பட்ட உதடுகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் ஒரு வழியாக அடிக்கடி கவிதைகளை வரைவதன் மூலம் தன்னை சமாதானப்படுத்த்யிருக்கிறார் என தெரிய வருகிறது
தாயானவள் தன் பிள்ளைக்கு எந்த குறையும் வைக்க மாட்டாள் அது போல தன பாடசாலைதான் தன்னுடைய இரண்டாவது தாய் என்பதையும், ஜெசீரா நன்றி மறந்தவளல்ல என்பதையும் காட்டும் விதமாக “இரண்டாம் தாய் மடி என்ற கவிதையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்
அல்  ஹிஜ்ரா
என் இரண்டாம்  தாய் மடி
நான் தாய் மடியில்
இன்பத்தை சுவைத்தவள் அல்ல
எனினும் என் ஹிஜ்ரா தாய்
அந்த குறையையும் வைக்கவில்லை
எம் கலையகத்தின் ஆணி வேர் ,ஜாபிரின் அறிவுரைகளும் ,என்னை தூக்கிவிடும் முயற்சிகளும் ,கலையகம் விட்டகலும் நொடிகளில் கூட ,என் உள்ளத்தில் அது என்றும் நிலைத்திருக்கும்……..என்று நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றார்.
“சாதிப்பவள் பெண்ணே” என்ற கவிதையில் ‘மங்கையரின் மடமை மறைந்து,மண்ணில் சாதனை செய்ய,பூரிப்புடன் மண்ணில் தோன்றுபவள் பெண்ணே….., என்று சொல்லி ஜெசீரா பெண்களே புறப்படுங்கள் சாதிக்கலாம் என்று ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அதற்க்கு நானே உதாரணம் எனவும் தன்னுடைய கவிதை புனையும் ஆற்றலை கொண்டு மறை முகமாக சொல்லி இருக்கிறார்.
தன்னுடடைய வலிகளின் உச்ச கட்டத்தினை  “வி(ச)தியா”… கவிதையில்  இவ்வாறு பதிவு செய்கிறார் பேசத்தேரிந்தும் ஊமையான உணர்வுகளின் கண்ணீர் …  பேசுகின்றது பேனா மையில் ஓசையின்றி அழுகுரலுடன்…. வீசுகின்ற காற்றுக்கும்….,சுற்றுகின்ற பாருக்கும்,…மின்னுகின்ற விண்ணுக்கும்,….ஓடுகின்ற ஆற்றுக்கும்….,பாவையவள் கண்ணீரோ பதில் சொல்ல தெரிந்திருக்கும்…….இங்குதான் வாசிக்கும்போது வலித்தது ஜெசீராவின் கவிதைக்கு உயிர் இருக்கிறது என்பதை உணர முடியும் அவரது கவிதையை அனுபவித்து வாசிக்கும்போது  நாமும் அவரது வலிகளை உணரலாம்
இந்த உலகை படைத்தவன் இறைவன்தான் ஆனால படைக்கப்பட்டது மனிதனுக்கு விழுந்து விழுந்து எழும் மனிதனுக்கு முடியும் என்பதை உனர்த்த ஜெசீரா “உன்னாலும் முடியும்” கவிதையில் ”’ தோல்வியா உனது முகவரிகள்?.. கண்ணீரா உனது கவி வரிகள் ?…. என்று நம் நிலைப்பாட்டை ஆரம்பத்தில்  சொல்லிவிட்டு  ஆறுதலுக்காக … உன் புன்னகையே நாளைய விடியல் …..உன் முயற்சியே எதிர்கால வித்துக்கள் ….. இடையில் சொல்லி  இம்மண்ணில் மற்றும் விண்ணில் ……இன்றும் புறப்படாத சாதனைகள்…..எதிர்காலத்தை எதிர்பார்த்து உனக்காகவே மீதமுள்ளது… …. என்று முடிக்கும் போது நமக்குள் ஒரு  மறுமலர்ச்சி தோன்றுகிறது எனலாம்…
மனித நேயத்துடன் வாழ விரும்பும் மனிதர்களில் நானும் ஒருத்திதான் ஆனாலும் எங்குமே மனித நேயம் இல்லாது செத்து விட்டது என்பதற்கு ஜெசீரா நம்மைப்பார்த்து  “பதில் கூறு ” என்று சொல்லி விட்டு  அக்கவிதையில் இப்படி சொல்லுகிறார்  …கேட்டால் என் கடவுள் என்கின்றான்…… கேட்காவிட்டால் கடவுளே இல்லை என்கின்றான்……. மனிதனில் மனிதத்தை எங்கே புதைதிருக்கின்றாய்……. இதயத்தில் என்று சொன்னாயா? இந்தக்கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் திக்கித்தவிக்க வேண்டியிருக்கிறது
“மாற்றுத்திறனாளி” என்ற கவிதையில் உலகம் என்னை ….மாற்றுத்திறனாளி எகிறது …ஏன் என்று புரியவில்லை எனக்கு….. சொல்லி இடை நடுவில் சொல்லுகிறார்  வாய் பேசாதவள் நான் ……… யாரையும் ஏமாற்ற பொய் பேசியது கிடையாது……  என்று கவிதையின்  முடிவு வரை  இருக்கின்ற ஒவ்வொருவொரு மாற்றுத்திறனாளியும் தேக ஆரோக்கியம் உள்ளவர்கள் அந்த சொல்லை உச்சரிக்கும் மனிதர்களே  மாற்றுத்திறனாளிகள் என்பதை  சுட்டிக்காட்டியுள்ளார் இவ்வாறு ஜெசீராவினுடைய கவிதைகளை தொட்டுக்கொண்டே செல்லலாம்…..
காலச்சுவடுகள் கவிதை  நூலுக்கான வாழ்த்துரையை  அமைச்சர் ரிசாட் பதியுதீன்,  தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.அனரண் சோமராஜா ,மற்றும் செட்டிக்குள பிரதேச செயலாளர் என்.கமலதாசன் மற்றும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஜாபீர் அவர்களும அவர்களும் வழங்கியுள்ளனர் இந்நூலுக்கான அணிந்துரையை ஆசிரியர் காண்டீபன் அவர்களும் வழங்கியுள்ளார்..
இதயத்தினுள் எரிந்துகொண்டிருந்த தீக்குழம்பு செல்வி ஜெசீராவின் கைகளால் பேனாவிலிருந்து வடிக்கப்பட்டு அது இன்று காலச்சுவடு என்னும் குழந்தையாக பிரசவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் முதல்  முஸ்லிம்   கவிதாயினியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ள இவர் வன்னி மண்ணில் அடையாளப்படுத்தப்பட  வேண்டிய கலைச்சின்னம். இவ்வாறு  சாதிக்க துடிக்கும் ஜெசீரா சமூகத்தில் போற்றப்படவேண்டியவரே…
unnamedunnamed (1)