அனைத்து நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பணிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 72ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, நாளையிலிருந்து (1) ஒரு வாரத்துக்கு சகல அரச, தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களையும் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.