(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஜனவரி மாதம் 09ம் திகதி “Ayya came to Sri lanka on 9th of January for New Year holidays” எனும் தொனியின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இதற்கு பறைசாற்றுகிறது. ஜனவரி 16 “Ayya is in SL He is not responsible for whatever’s happening in China. He studies in Zhejian University in Haining. Not in Sichuan” எனும் தொனியின் கீழ் மற்றுமொரு புகைப்படம் வெளியாகி இருந்தது.

மேலும், அது தொடர்பிலான விமான டிக்கட்டுக்களும் அதனை நிரூபித்துள்ளது. டிக்கெட் விபரங்களில் கடந்த டிசம்பர் 31ம் திகதி வெளியிடப்பட்டுள்ளதோடு, ஜனவரி 09ம் திகதி விபூதி வீரவங்ச இலங்கைக்கு வருகை திரும்பியுள்ளார். பின்னர் மீளவும் பெப்ரவரி 17ம் திகதி Shanghai நோக்கி பயணிக்க business class இல் டிக்கெட் வாங்கியுள்ளார்.

விபூதி வீரவங்ச Zhejiang University | ZJU · Department of Economics தொடர்பில் கல்வி பயில்வதாக Researchgate.net ஊடாக அறியக்கிடைத்தது.

இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்சவின் அலுவலக செய்திகளில் தெரிவிக்கையில், விபூதி வீரவங்ச ஜனவரி 09ம் திகதி நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sichuan , Wuhan மற்றும் Shanghai ஆகிய நகரங்களை கீழே காணலாம், எனினும் விபூதி வீரவங்ச கல்வி பயிலும் நகரம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. (Zhejiang University)

சீனாவின் வுஹானில் இருந்து வெளியேறிய இலங்கை மாணவர்கள் 50 பேருக்கு தண்ணீர் வழங்காது பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அழைத்துச் செல்வோருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றதாக செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.