(ஃபாஸ்ட் நியூஸ் |நியூயார்க்) – ஹரியின் மனைவி மேகன் 2022 இல் கார் விபத்தில் உயிரிழப்பார் என பிரபல பாடகி ஒருவர் கணித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ராப் பாடகியான அஜீலியா பங்கஸ் (Azealia Banks) அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும் எனக் கணித்துள்ளார்.
அவற்றில் 2022இல் மேகன் கார் விபத்தில் உயிரிழப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரபல மொடலும் ஊடகவியலாளருமான கிம் கதர்ஷியன் அவரது கணவரை 2026இல் விவாகரத்துச் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024இல் பிரபல பாடகி பியோன்ஸும் அவரது கணவரும் பகிரங்க திருமண உறவுமுறைக்கு மாறுவார்கள் எனவும் அவர் கணித்துள்ளார்.
இளவரசர் ஹரி 2021இல் மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்புவார் எனவும் அஜீலியா பங்கஸ் (Azealia Banks) கணித்துள்ளார்