உலகக்கிண்ண இறுதிப்போட்டி; இலங்கையின் நவீத் நவாஸை நினைவுள்ளதா..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷ் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பிரதான பயிற்சியாளரான நவீத் நவாஸ் அந்த அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றுள்ளார்.

இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நவாஸ் இதற்கு முன்பு இலங்கை 19 வயத்திற்கு உட்பட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும், இலங்கை ஏ மற்றும் மகளிர் அணிக்காக பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 19 வயதுக்குட்பட்ட தலைமை பயிற்சியாளராக கடந்த 2018 ஜூலை மாதம் முதல் தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலககிண்ணம் வரை நவீத் நவாஸை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நவீத் நவாஸ் 1973ஆம் ஆண்டு பிறந்தார்.

முழுப் பெயர் – முஹமத் நவீத் நவாஸ்
பிறப்பு – 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி
பிறந்த இடம் – கொழும்பு
வயது – 43
விளையாடிய காலப்பகுதி – 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2002 வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி – இடதுகை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 03
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 31
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 15*
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 15.50

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 01
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 99
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 78*
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 99.00

மேலும்,19 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான அரையிறுதிப்போட்டியில் நியுசிலாந்தினை ஆறு விக்கெட்களால் தோற்கடித்து பங்களாதேஸ் அணி உலக கிண்ண இறுதிப்போட்டிக்குள் முதன் முறையாக நுழைந்துள்ளது.

பங்களாதேஸ் அணி சர்வதேச உலக கிண்ணப்போட்டியொன்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளமை இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள பங்களாதேஸ் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கின்றது.