(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அபே ஜாதிக பெரமுன எனும் பெயரில் இதுவரை செயலில் இருந்த அரசியல் கட்சி சமகி ஜன பலவேகய என பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணிக்காகவே அபே ஜாதிக பெரமுன இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அபே ஜாதிக பெரமுன தலைவராக சேனக சில்வா இருப்பதுடன், புதிய திருத்தத்திற்கு பிறகு சமகி ஜன பலவேகய துணை தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
