எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 33 அமைச்சுப் பதவிகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட உள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக வரையறுக்கப்படும்.
ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகளின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது என மேலும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
(riz)