(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மலையகத்தில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் பொது தேர்தலில் போட்டியிட போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தோட்டத் துறை மக்களுக்காக போட்டியிட தனது சகோதரர் முத்தையா பிரபாகரன் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் முதற்கட்டமாக மலையகத்தில் இளைஞர்களை திரட்டும் சந்திப்புகளையும் சமூக சேவைகளையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முரளிதரனின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக மலையகத்தில் ஏற்கனவே அரசியலில் வேரூன்றி இருக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.