தரிந்து கெளஷாலுக்கு பந்து வீசத் தடை விதிக்குமா ஐசிசி?

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்து வீசியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தரிந்து கௌஷல் 14 நாட்களுக்குள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கூறியுள்ளது.

சோதனை அறிக்கை வெளிவரும் வரை தரிந்து கௌஷல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

தரிந்துவின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது என நிரூபிக்கப்படட்டால் அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)