அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

மேலும், குறித்த தீர்மானத்தோடு இன்னும் பல யோசனைகளை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.