மஹிந்தவை சந்தித்த சீனப் பிரதிதிகள் (Including Photos)

சீனாவில் இருந்து வந்த பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளனர்.

இலங்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தமை, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை அதிகரித்து, இலங்கையை உலகின் பலமிக்க நாட்டின் உற்ற நண்பனாக்கியமை குறித்து இந்த பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னோடியான மாதுளுவாவே சோபித தேரர், நல்லாட்சி அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அண்மைய காலத்தில் இலங்கையின் வேகமான அபிவிருத்திக்காக வீதிகள், துறைமுகங்கள், விமானங்கள் போன்றவற்றுக்கு சீனாவிடம் இருந்து பாரிய உதவிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவுக்கு எதிர்ப்பு காட்டி அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்த அதிவேக வீதி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க சீனாவிடம் இருந்தே தொடர்ந்தும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதாக சிங்கள இணையத்தளம்  ஒன்று  தெரிவித்துள்ளது.

mahintha-rajapaksha1 mahintha-rajapaksha-2mahintha-rajapaksha-5mahintha-rajapaksha-4

(riz)