(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று(25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை வழங்கிய அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதற்கான விடயங்களை பேரவையின் உயர் மட்ட பிரிவிற்கு நாளை (26) தெளிவுபடுத்தவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த கூட்டுத் தொடரில் இலங்கை உட்பட 47 நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.