ஹகீம் மீளவும் பல்டி – JVP : TNA கடும் அதிருப்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தலுக்கான கூட்டணி குறித்து தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கூட்டணியில் இணைவதற்கான ஆயத்தங்களை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டிருப்பதாகவும், தான் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் களமிறங்க அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியானது திரிவுபடுத்தப்பட்டது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மீது ஏற்பட்டுள்ள அதிருப்திகளை தனித்துக் கொள்வதற்காகவே ரவூப் ஹக்கீம் தம்முடன் ஒன்றிணைய முனைவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் ஒத்து இது தொடர்பில் கடும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தார்.