(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தான் சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக வைரலாகும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என பிரபல இரத்தினக்கல் வியாபாரி ப்ரியங்க புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
யாராவது குறித்த குற்றச்சாட்டினை நிரூபிக்குமாறு இருந்தால், தான் நிர்வாணமாகி குறித்த பரிசோதனைகளுக்கு முன்னிலையாகத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் உள்ள நபர் மற்றும் தனது உடல் உறுப்புக்களது அடையாளங்களை எச்சந்தர்ப்பத்திலும் காண்பிக்க, தான் தயார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டினை நிரூபிக்கும் நபருக்கு 10 வினாடிகளில் 100 கோடியினை வழங்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.