(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அதிர்ஷ்ட இலாப சீட்டு வெற்றி பெற்ற நபர் இரு வாரங்களுக்குள் போதைக்கு அடிமையான சம்பவம் ஒன்று கண்டி கடுகஸ்தொட்டை பகுதயில் பதிவாகியுள்ளது.
புதிய கோடீஸ்வரனுடன் அவரின் நண்பர்கள் இவருவர் 1400 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இருவரங்களுக்கு முன்பு குறித்த நபருக்கு 2.5 கோடி ரூபாய் பணம் அதிர்ஷ்ட இலாப சீட்டில் வெற்றிப்பெற்றிருந்தார்.
குறித்த இவர் கடந்த 21 திகதி கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பாரிய பரிசு தொகை வென்ற பின்னர் அவரின் நண்பர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 3 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.