(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – மைதானமாக கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்திற்கு நேற்று சென்றிருந்தார். அங்கு அவர் உரையாற்றும் போது இந்த நாடு (இந்தியா) தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சூச்-சின் தெண்டுல்-கெர் மற்றும் விரோட் கோலி ஆகியோரை கொடுத்துள்ளது என்றார்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் சச்சின் தெண்டுல்கர் உலகளவில் பிரபலமானாவர். இவர் பெயரை டிரம்ப் தவறாக உச்சரித்திருப்பது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டுவிட்டர்வாசிகள் பல்வேறு கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
டிரம்ப் சூச்-சின் தெண்டுல்-கெர் எனக் கூறிய நிலையில் இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ´´FFS, PiersMorgan, தயது செய்து உங்களை சேர்ந்தவர்களுடன் லெஜண்ட் பெயரை எப்படி உச்சரிப்பது என்று கேளுங்கள்´´ என்று பதிவிட்டுள்ளார்.

மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ´´இன்று எப்படி இருக்கிறீர்கள் சூச்-சின்´´ என்று பதிவிட்டுள்ளார்.

