அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகிய 21 முஸ்லிம் எம்.பி.மார்களையும் (01.09.2015) கொழும்பில் சந்தித்து, அர்த்தபுஷ்டியான கலந்துரையாடல் ஒன்றை அவர்களுடன் நடத்தி, பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய சூரா கவுன்சில் என்பனவும் இதில் பங்கேற்றுள்ளன. உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி, செயலாளர் மௌலவி எம்.எம்.முபாரக், பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மன்னிப்பு, ஒற்றுமை, புரிந்துணர்வு, கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு முதலான அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி தமது பணிகள மேற்கொள்ளும் படி முஸ்லிம் எம்.பி.மார்கள் கேட்கப்பட்டுள்ளனர். இரு தரப்பாரும் இச்சந்திப்பு தொடர்பில் தமது திருப்திகரமான நம்பிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.