(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.