(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –முஸ்லிம் வியாபாரிகளை குறிவைத்து ஒரு கும்பல் பண மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் சம்பவங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.
முஸ்லிம் கடைகளை இலக்காக கொண்டு, தாம் பௌத்த விகாரையில் இருந்து விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதி கதைப்பதாக தெரிவித்து, தமது விகாரை உதவி செய்யுமாறு கூறி தொலைபேசி மூலம் முஸ்லிம் கடைகளுக்கு அழைப்பு எடுப்பதாகவும்.
பின்னர், ஒரு சில மணித்தியாளத்தில் ஒருவரை அல்லது சிலரை அனுப்பி பணமாக அல்லது பொருட்களாக உதவிகளை பெற்றுக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
ஆகவே இவ்வாறான போலி பிக்குகளிடம் இருந்து முஸ்லிம் வியாபாரிகள் பாதுகாப்பாக நடந்து கொள்ளவேண்டும் என சமூக ஆவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்களின் உண்மை தன்மையை அறிந்து உதவி செய்வது சிறந்தது எனவும் இன்றைய சூழ்நிலையில் இன ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.