முஸ்லிம்களது வெள்ளிக்கிழமை தொழுகைகளும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான்) –  ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்த கவலைகளால் தலைநகர் டெஹ்ரானில் முஸ்லிம்களது வெள்ளிக்கிழமை தொழுகைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாக ஈரான் உள்ளது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.