கழுகு மைத்திரிக்கு மஹிந்தவின் அதிரடிப் பதில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த காலங்களில் சிலர் கழுகுகளாக இருக்க முயற்சி செய்தமையினால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் ஜனாதிபதி பிரதமருக்கு சார்பாக இருக்கவும் இல்லை, பிரதமர் ஜனாதிபதிக்கு சார்பாகவும் இருக்கவில்லை என பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்

இதனால் நாட்டிற்கு எந்தவொரு சேவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலினை கழுகுக்கு ஒப்பிட்டு கதைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.