இலங்கையர்கள் 60 ஆயிரம் பேருக்கு ஆபத்து [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸை காரணமாக இத்தாலியில் வாழும் 60 ஆயிரம் இலங்கையர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இத்தாலியில் 11 மில்லியன் மக்கள் வாழும் லோம்பார்டி மாகாணம் முடக்கப்பட்டுள்ளமையினால் அங்கு வாழும் 60 ஆயிரம் இலங்கையர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இத்தாலியில் சுமார் 104000 இலங்கையர்கள் வாழும் நிலையில், 60 ஆயிரம் இலங்கையர்கள் லோம்பார்டி மாத்திரம் வாழ்வதாக கூறப்படுகின்றது.

குறித்த பிரந்தியத்தில் பொது இடங்கள் மூடக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் இன் நடவடிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Image result for corona italy sri lanka

இதேவேளை, இத்தாலியில் கடந்த 24 மணித்தியளத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன்,5883 பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Image result for corona italy sri lanka