முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகிய இருவருக்கும் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்புவிடுத்துள்ளது.
ரக்னா லங்க நிறுவனத்தின் ஊழியர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும், இன்று, விசாரணைக்கு தெஹிவளை கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்கவும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினமும், இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் சுட்டிக்காட்டவள்ளது…
(riz)