![கொவிட் – 19 : தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைவு கொவிட் – 19 : தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைவு](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/03/WHO.png)
கொவிட் – 19 : தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும், கொரோனா வைரஸ் பரவலானது தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து தகவல்களை வெளியிடும் நாளாந்த ஊடக சந்திப்பின் போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொது நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் எந்தனம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், நேற்று நள்ளிரவோடு நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள் புதிதாக 3 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதற்கமைய இதுவரை 72,000 கையுறைகள், 5 இலட்சத்து 84,000 பாதுகாப்பு முக கவசம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.